ஒரேடியாக இரண்டு மடங்கு சம்பளத்தை ஏற்றி தயாரிப்பாளரை கதிகலங்கவைத்த நயன்தாரா.! அதுக்குன்னு இத்தனை கொடியா.!

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமா நடிகைகளில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். அதோடு சினிமாவில் மற்ற நடிகைகளை விடவும் மிகவும் கெத்தாக இருந்து வரும் ஒரே நடிகை இவர்தான்.

ஆனால் நயன்தாரா பாலிவுட் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வராமல் இருப்பது ஏன் என்று  கேள்வி குறியாகவே இருக்கிறது .அதற்கு கோலிவுட் வட்டாரங்கள் பல நடிகைகள் இருக்கும் இடத்தை விட்டு மற்றொரு மொழியில் நடிக்க போய் இருந்த மொத்த மார்க்கெட்டையும் வீணாக்கி கொண்டவர்கள் உள்ளார்கள்.

எனவே நயன்தாரா இருக்கும் இடத்திலேயே தனிக்காட்டு ராஜாவாக இருக்கலாம் என்று நினைக்கிறார் போல என்று கூறியிருந்தார்கள். அதோடு தற்போது கோலிவுட்டில் நடிகர்கள் வாங்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகை இவர்தான் என்ற புகழும் உள்ளது.

இவர் தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தமிழில் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் நடிக்கும் திரைப்படங்களில் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த உள்ளாராம். அந்த வகையில் தற்பொழுது வரையிலும் ரூபாய் 10 கோடி வரையிலும் சம்பளம் வாங்கி வரும் இவர் மலையாளத்தில்  இதனை விடவும் மிகவும் குறைவாக தான் வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் பல நடிகர் நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்து உள்ளார்கள் ஆனால்  நயன்தாரா  மட்டும்தான் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி உள்ளார் எனவே தயாரிப்பாளர்கள் பலர் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.