தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் சிறந்த நடிப்பு திறமையினாலும் விடா முயற்சியினாலும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.
தற்பொழுது நயன்தாரா ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் டப்பிங் வேலைகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதோடு இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கூறியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவன்வுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் படமாக நயன்தாரா நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். இதனைத் தொடங்கி இத்திரைப்படம் சில மாதங்களில் ஓட்டிட்டு வழியாக ரிலீசாகும் என்று அறிவித்துள்ளார்கள். இவ்வாறு சோலோ ஹீரோயினாக கலக்கி வரும் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பதாக கூறி உள்ளாராம்.
அந்த வகையில் இதற்குமேல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் நடிக்கவும் மாட்டாராம் இனிமேல் நயன்தாரா நடிகர்களுடன் டூயட் பாடும் காட்சிகளும் இதற்குமேல் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது. இவர் தற்போது நடித்து முடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாகும்.