தென்னிந்திய சினிமாவில் தற்போது நம்பர் 1 ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் எந்த கேரக்டர் நடித்தாலும் தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார்.
பொதுவாக ஒரு நடிகை முன்னணி முன்னணி நடிகர்ளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு சினிமாவில் வளர்ந்து இருந்தால் அந்த நடிகையின் மீது பல சர்ச்சைகள் எழுவது சாதாரண விஷயம் அந்த வகையில் நயன்தாராவின் மீது பல சர்ச்சையான விஷயங்கள் தற்போது வரையிலும் வந்தவண்ணம் உள்ளது.
அந்த வகையில் முதலில் சிம்பு அடுத்ததாக பிரபுதேவா என ஆரம்பித்து தற்போது விக்னேஷ் சிவனை ஐந்து வருடங்களாக நயன்தாரா காதலித்து வருகிறார். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் பல திரைப்பிரபலங்கள் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் இன்னும் ஒரு வருடங்களில் பிரிந்து விடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத நயன்தாரா மற்றும் விக்னேஸ் சிவன் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரொமான்டிக்கான புகைப்படங்களையும் தங்களது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
தற்பொழுது நயன்தாரா நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பேபி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.அந்த வகையில் இந்நிறுவனத்தின் முதல் திரைப்படம் தான் நெற்றிக்கண்.
இத்திரைப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிப்பதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. எனவே படப்பிடிப்பிற்காக தனியாக ஒரு விமானத்தில் நயன்தாரா ஹைத்ராபாத்திற்கு சென்று படப்பிடிப்புகளை முடித்துவிட்டு மீண்டும் வந்துள்ளார். அவ்வபோது அவர் விமானத்திலிருந்து கெத்தாக நடந்துவரும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.