ஹிட் பட இயக்குனருடன் இணையும் நயன்தாரா.! சோலோவா மிரட்ட போகிறாரே

nayanthara

மற்ற நடிகைகளைப் போல் ஒரு மொழியில் பிரபலமடைந்த விட்டு வேறு ஒரு மொழியில் நடிப்பது போன்றவற்றை செய்யாமல் இருக்கும் இடத்தில் ராணியாக கம்பீரமாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா.  இவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது பல அவமானங்களையும் கேளிகளையும் சந்தித்து அதன் பிறகு தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் தற்பொழுது புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

பொதுவாக நடிகைகளின் மீது காதல் சர்ச்சைகள் போன்றவை சினிமாவில் எழுவது வழக்கம். அந்த வகையில் அதிகமான சர்ச்சைகளை சந்தித்துள்ளார் நயன்தாரா தற்போது தான் கடந்த 5 வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இதனையும் பல கோலிவுட் வட்டாரங்கள் இவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் பிரிந்து விடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.

ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அதனைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள்.

இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவ்வாறு இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ள இவர் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்ந்தெடுத்து வருகிறாராம்.

அந்த வகையில் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா தாக்கம் முடிந்து பிறகு பிரபல இயக்குனரான அறிவழகனுடன் கைகோர்க்க உள்ளாராம்.

இயக்குனர் அறிவழகன் நயன்தாராவிடம் ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை நயன்தாராவிற்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அறிவழகன் ஈரம்,வல்லினம்,ஆறுவது சினம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆவார். தற்போது இவர் பார்டர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.