நயன்தாராவுக்கு நறுக்கின்னு இரண்டு கிப்ட் கொடுத்த விக்னேஷ் சிவன் – ஒவ்வொன்றும் வேற லெவல்..

nayanthara
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது காதலித்தார் அதன் பிறகு இந்த ஜோடி 7 வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் என பலரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு ஹனிமூணுக்காக ஹாங்காங் மற்ற முக்கிய இடங்களில் சுற்றி திரிந்து வந்த இந்த ஜோடி தற்பொழுது சினிமா, குடும்பம் போன்றவற்றில் முக்கிய கவனம் காட்டி வருகிறது. குறிப்பாக திருமணம் செய்து கொண்ட பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

அந்த வகையில் நயன்தாரா கையில் ஜவான், கனெக்ட் போன்ற திரை படங்கள் கைவசம் இருகின்றன அதில் முதலாவதாக கனெக்ட் திரைப்படம் வெளிவர இருக்கிறது. அண்மையில் இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று போடப்பட்டது அப்பொழுது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர்கள் வந்து பார்த்தனர்.

அப்பொழுது எடுக்கப்பட்டார் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது அந்த புகைப்படத்தில் நயன்தாரா சும்மா ஹாலிவுட் ஹீரோயின் போல செம்ம அழகாக இருந்தார். அதனை தொடர்ந்து கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார் அப்பொழுது பல்வேறு தகவல்களை நயன்தாரா பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றாக படத்தின் பிரமோஷனுக்கு ஏன் வரமாட்டேன் என தெள்ள தெளிவாக கூறினார்.

மேலும் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த இரண்டு முக்கிய பரிசுகளையும் காட்டி அசத்தினார். விக்னேஷ் சிவன் வாட்ச் மற்றும் v- எழுத்தில் இருக்கும் பிரேஸ்லெட் என இரண்டையும் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையதள பக்கத்தில் உலா வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nayanthara
nayanthara
nayanthara
nayanthara