தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் இவருடைய நடிப்பில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய திருமண வேளையில் பிஸியாக இருந்து வந்தார் மேலும் திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாரா மிகவும் ஜாலியாக சுற்றி வந்த நிலையில் தற்போது சில மாதங்களாக படவேளையில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்
அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது மேலும் இதனைத் தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை நயன்தராவின் சில திரைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் அதனைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள் அதாவது நயன்தாரா தன்னுடைய திரைப்படத்திற்காக உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார் எனவே ஒல்லியாக இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா கிழவி போல் மாறிவிட்டதாக கமெண்ட் செய்து வந்தார்கள்.
எனவே இவருடைய புகைப்படம் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் என மிகவும் அழகாக இருக்கும் இவருடைய சமீப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் லைக்குகளும் கமெண்டுகளும் குவித்து வருகிறார்கள் இவ்வாறு வயதானாலும் கூட மிகவும் அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் கண்ணை பறிக்கும் அளவிற்கு இருக்கிறது.