தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. அதோடு சுற்றுலா இடங்கள், இணையதளங்கள் என்று அனைத்திலும் விக்னேஸ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தான் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார்கள்.
அதோடு பல ரசிகர்கள் இவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் சினிமா பிரபலங்கள் சிலர் இவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் பிரிந்து விடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.
ஏனென்றால் நயன்தாராவின் மீது பல காதல் சர்ச்சைகள் இருந்து வருகிறது. பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தால் என்றால் அவர்களின் மீது சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. அதோடு நயன்தாரா சிம்பு உட்பட இன்னும் சிலருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களே பெரும்பாலான சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து மிகவும் நெருக்கமாக இருக்க புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் செல்லும் அனைத்து இடங்களுக்கும் அவருடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே ஒரு தரப்பு ரசிகர்கள் கண்டிப்பாக இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் வெளிநாட்டிற்கு பயணம் சென்று உள்ளார்கள். அவ்வபொழுது பிளைட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 37 வயது ஆனாலும் கூட இன்னும் பால் பப்பாளி போல் பல பலனு இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.