Nayanthara Net worth: அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரையிலும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை பூர்விகமாகக் கொண்ட நயன்தாரா மரியம் குரியன் என்ற தனது இயற்பெயரை சினிமாவிற்காக நயன்தாரா என்று மாற்றிக்கொண்டார்.
இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.
கத்தி பட வில்லனின் மனைவியா இவங்க.. அழகில் ஹாலிவுட் நடிகையை தூக்கி சாப்பிடுறாங்க..
அப்படி வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பிறகு மன வருத்தத்தால இருவரும் பிறந்ததாகவும் சொல்லப்பட்டது இதனை அடுத்த பிரபுதேவா உடன் காதலில் சிக்கிய நிலையில் சில ஆண்டுகள் ஒன்றாக சுற்றி வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான் நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்பொழுது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இவ்வாறு குழந்தைகள் குடும்பத்துடன் அதிக நேரம் இருந்து வரும் நயன்தாரா அதே போல் படங்கள், பிசினஸிலும் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்.
நயன்தாராவின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து கூறிய வரும் நிலையில் இத்தனை ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். சென்னை மற்றும் மும்பையிலும் 100 கோடி மதிப்புள்ள பங்களாக்கள் உள்ளது.
90ஸ் ரசிகர்களின் கனவு கண்ணி சுவலட்சுமியா இது… பலருக்கும் தெரியாத தகவல்..
அதோட மட்டுமல்லாமல் 100 கோடி முதலீட்டில் அழகு சாதனப் பொருட்களுக்கான புதிய பிசினஸ் செய்யும் துவங்கியுள்ளார். தனியார் செட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கும் நிலையில் உயர் ரக பல கோடி மதிப்புள்ள கார்களையும் வைத்திருக்கும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.