பல கோடிக்கு விலைபோன நயன்தாராவின் திரைப்படம்.!! தீபாவளிக்கு ரிலீஸ்….

actress nayanthara mukuthiamman movie:நடிகை நயன்தாரா தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துள்ளார், நடிகை நயன்தாரா முதன் முதலாக அம்மன் வேடமிட்டு நடித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. அதனால் படப்பிடிப்புகளும் திரையரங்குகளும் மூடப்பட்டது, இந்தநிலையில் திரையரங்கை திறக்க தாமதம் ஆனதால் பல திரைப்படங்கள் OTT யில் நேரடியாக ரிலீஸ் ஆகின்றன.

அப்படி இருக்கும் வகையில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பிரபல OTT நிறுவனமான ஹாட்ஸ்டார் 20 கோடிக்கு விலைக்கு வாங்கி விட்டதாம், அதுமட்டுமில்லாமல் மூக்குத்தி அம்மன் டப்பிங் ரைட்ஸ் சுமார் ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்பனை ஆகி விட்டது என தெரிவிக்கின்றார்கள்.

இந்த நிலையில் படத்தை வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வெளியிட முடிவு எடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி, அதனால் 2020ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

mookuththi amman
mookuththi amman