நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சொல்லபோனால் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை இவர்தான். நடிகை நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதிலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா சமீபகாலமாக சோலோ ஹீரோயினாகமற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் நல்ல கதை இருந்தால் காமெடி நடிகர்களின் படத்தில்கூட நடிப்பதற்கு ரெடி என்று ஓகே சொல்லி விடுகிறாராம் அப்படி நயன்தாரா ஓகே சொல்லிய திரைப்படம் கோலமாவு கோகிலா.
இந்த திரைப்படத்தில் யோகி பாபு அவர்களுடன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்குனராக களம் இறங்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் அம்மன் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் முதலில் நயன்தாராவை அம்மன் வேடத்தில் பார்ப்பதற்கு பலரும் விமர்சனம் செய்தார்கள்.
ஆனால் படம் வெளியாகி படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலைப் பெற்று வசூலைக் குவித்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியாகிய பிகே படத்தின் காப்பி என பல விமர்சனங்கள் எழுந்தது. இந்த சூழ்நிலையில் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ஒரு நேர்காணலில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் பிகே படத்தில் கொஞ்சம் சுட்டு எடுத்தது தான் அது மட்டுமில்லாமல் என் குடும்ப கதையையும் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்தோம் என வெளிப்படையாக கூறிவிட்டார்.
இந்த படத்தை பார்த்தாலே தெரியும் என ஆர் ஜே பாலாஜி மிகவும் ஹானஸ்டா ஒப்புக்கொண்டார். இதோ அவரின் நேர்காணல் வீடியோ.
That honesty of RJ Balaji 💥💥
Nallavela Ennoda best writing film nu sollama vitaare 😅😂 pic.twitter.com/UoYSpdrBZZ
— VIGNESH (@Akvicky_2) June 23, 2021