அடி மேல் அடி.. 20 கோடி ரூபாயை இழந்த நடிகை நயன்தாரா.! பின்னணி இதோ..

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தொடர்ந்து ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமடைந்த நிலையில் தற்போது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் திருமணத்திற்கு பிறகு பல பிரச்சனைகளினால் நயன்தாரா 20 கோடியை இழந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பல பிரச்சனைகளுக்குப் பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என தெரியவந்தது. இந்நிலையில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்திருந்த சில திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் இதனை அடுத்து விக்னேஷ் இவனுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு தவறி போனது.

எனவே நயன்தாராவிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது தற்பொழுது நடிகை நயன்தாராவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவி போகி உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க நயன்தாரா கமிட்டாக இருந்த நிலையில் 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் முடிவு செய்த நிலையில் முன் பணத்தையும் நடிகை நயன்தாரா பெற்றுள்ளார்.

ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் நயன்தாராவால் தற்போது கால் சீட் கொடுக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்துள்ளது. இதனால் நயன்தாராவை அந்த படத்திலிருந்து விளக்கி விட்டு தான் கொடுத்த முன் பணத்தையும் தயாரிப்பாளர் திரும்ப பெற்றுள்ளாராம் எனவே 20 கோடி ரூபாய் கைநழுவி போய் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசிப்பட்டு வருகின்றனர்.