தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் குறையும் என சொல்வார்கள்.
ஆனால் நடிகை நயன்தாராவுக்கு எதிர்மறாக நடந்து வருகிறது தற்போது தான் வருடத்திற்கு நான்கு, ஐந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் 2023 -ல் கூட ஜவான், இறைவன், நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய படங்களில் படும் பிஸியாக நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கணவர் விக்னேஷ் சிவனுடன்..
இணைந்து ரவுடி பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் மூலமும் பல்வேறு நல்ல படங்களை தயாரித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்களின் மீதும் பல கோடி முதலீடு செய்து உள்ளார் இதனால் நடிகை நயன்தாராவுக்கு நாளா பக்கமும் காசு குவிகிறது.
இப்படி வெற்றி நடிகையாக ஓடும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா எங்கு சென்றாலும் மேக்கப் போட்டுக்கொண்டு செம கெத்தாக வலம் வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்த இவர் திடீரென மும்பைக்கு புறப்பட சென்றுள்ளார் அப்பொழுது துளிகூட மேக்கப் போடாமல் பொது இடத்திற்கு வந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் மேக்கப் போடாமலேயே நீங்க செம்ம நச்சுன்னு இருக்கீங்க எனக் கூறி அந்த புகைப்படத்திற்கு தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நடிகை நயன்தாரா துளி கூட மேக்கப் போடாமல் சாதாரண ட்ரெஸ்ஸில் செம்ம மாஸாக நடந்து வரும் அந்த க்யூட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..