தன்னுடைய ஆசை காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகை நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் நெற்றிக்கண். இந்த திரைப்படத்தின் தலைப்பானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு தான்.
இவ்வாறு நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தை இயக்குனர் ராம் என்பவர் தான் இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக கிருஷ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் ஒளிப்பதிவாளராக ஆர் டி ராஜசேகர் அவர்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் ஆனது நயன்தாராவின் பிறந்த நாளில் வெளியாகியுள்ளது.
பொதுவாக அஜ்மன் திரைப்படத்தில் பெண்களை கேவலமாகவும் விமர்சிக்கும் வகையில் காட்டுவார்கள் அதேபோல இந்த திரைப்படத்திலும் ஏதேனும் காட்சிகள் இருக்கும் என எண்ணிய நிலையில் இந்த திரைப்படத்தில் பெண்களை ஆடை இல்லாமல் அஜ்மல் ரசித்து வருகிறார்.
இவ்வாறு அந்த கூட்டத்தில் சிக்கும் நயன்தாரா என்ன ஆனார் எப்படித் தப்பிப்பது என்பதே இந்த திரைப்படத்தின் கதையாகும். நயன்தாரா இந்த திரைப்படத்தில் கண் தெரியாத ஒரு பெண்ணாக நடித்துள்ளார் ஆகையால் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிரி கிடைக்கிறது.