actress nayanthara latest news: தமிழ் திரைஉலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா இவர் அறிமுகமான காலகட்டத்தில் நடிகை நயன்தாராவை கிண்டல் செய்யாத ஆட்களே கிடையாது. அந்த அளவிற்கு படிப்படியாக தன்னுடைய திறமையின் மூலம் தன்னை பிரபலமாக்கி கொண்டார்.
நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை கோட்டை விட்டு விட்டார். இதன் காரணமாக தன்னுடைய வாழ்க்கையில் ஏகத்திற்கு அவமானங்களையும் மரியாதையையும் இழந்துவிட்டார்.
இது போதாதென்று சமூக வலைதள பக்கத்தில் நயன்தாராவை மிக மோசமாக அழைப்பது மட்டுமில்லாமல் பல பட்ட பெயர்களும் உருவாகின இதனை தொடர்ந்து நமது நடிகை சினிமாவை விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் ஆர்வம் காட்டலாம் என்று எண்ணியிருந்த நிலையில் சிம்புவின் வலையில் விழா ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரைப்பற்றி தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவருக்கு பல்வேறு பட்டப் பெயர்களையும் வைத்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில் முன்னணி மூத்த நடிகர் ஒருவர் திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவின் பெயர் கூறப்பட்ட தான் ஆனால் அப்போது அந்த பொண்ணு எல்லாம் வேண்டாம் ஏற்கனவே பெயர் நாறிக் கிடக்கிறது நம்ம படம் அப்புறம் அவ்வளவுதான் என்று கூறி இருந்தாராம்.
ஆனால் அடுத்ததாக அவர் நடிக்கும் படத்திற்கு நயன்தாரா ஹீரோயினாக இருந்தால் நல்லா இருக்கும் என நயன்தாராவுக்கு தூதுவிட்டு உள்ளாராம். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது சிறு வயதிலிருந்தே சினிமாவில் நுழைந்தவர்.
இதைக் கேள்விப்பட்டதும் நடிகை நயன்தாரா அவர் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வந்தவர்களிடம் அவற்றை கூறி நான் சொன்னதை மறக்காமல் அவரிடம் கூறி விடுங்கள் என்று கெத்து காட்டி உள்ளார்.