actress nayanthara latest movie update: தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடுவதுதான் நடிகை நயன்தாரா இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார் அதுமட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான்.
பொதுவாக பிரபலமான நடிகைகள் வயது ஏற ஏற திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருவார்கள் ஆனால் நயன்தாராவோ வயது ஏற ஏற பட வாய்ப்புகளையும் குவித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது கதாநாயகனுடன் நடிப்பதை விட்டுவிட்டு சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் திரைப்படத்தில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் தற்போது திரைப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் அந்த வகையில் தற்போது தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கொண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர்கூட ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தி கூடங்கள் நெற்றிக்கண் போன்ற திரைப்படங்களை உருவாக்கி உள்ளார்கள் இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இதை தொடர்ந்து தற்போது விக்னேஸ்வரன் மற்றும் நயன்தாரா இருவரும் ஸ்டாபெரி காதல் என வித்தியாசமான திரைப் பட டைட்டிலை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்களாம் இவ்வாறு இவர்கள் தயாரிக்கப் போகும் இந்த திரைப்படத்தை விநாயக் என்பவர் தான் இயக்க போகிறாராம்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இவர் வெளியிட்ட இந்த டைட்டில் ஆனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.