பேய் மீது நம்பிக்கை இருக்கா.. இல்லையா.. நயன்தாரா கொடுத்த பதிலை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்.!

nayanthara-
nayanthara-

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஓடுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோல்ட் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து அடுத்ததாக கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் படமாக அமைந்துள்ளது இதில் நயன்தாராவுடன் கைகோர்த்து சத்யராஜ், வினய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் டிடி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சரியான பதில்களை கொடுத்து அதிர விட்டுள்ளார் நயன்தாரா..

முதலில் பேய் மீது நம்பிக்கை இருக்கா என்றும் பேய் பயம்இருக்கா எனவும் கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த நயன்தாரா ஆரம்பத்தில் பேய் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என கூறினார் மேலும் பேசிய அவர் சின்ன வயசுல யாரோ சொன்னதைக் கேட்டு அதன் பின்னர் மல்லாக்கா படுக்கவே மாட்டேன்.

ஒன் சைடா கை வச்சு தான் தூங்குவேன் என நயன்தாரா சொன்னதும்.. டிடி அதிர்ச்சி அடைந்தார் நயன்தாரா  நேரா  படுத்து துங்கினால் யாராவது நம்மில் வந்து அப்படியே இறங்கிடுவாங்களாம்னு சொன்னதைக் கேட்டதும் டிடிக்கு அல்லு இல்லை.. மேலும் எப்பொழுதுமே லைட்ட ஆப் பண்ணாம தான் படுத்து தூங்குவேன் என நயன்தாரா கூறினார்.

அண்ணாத்த படத்திற்கு பிறகு  நயன்தாரா தமிழ் ஹீரோகளுடன் படம் பண்ணவில்லை..  இப்பொழுது நயன்தாரா மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் கனெக்ட் படத்தை தொடர்ந்து நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அடுத்த வருடம் ஜூலை மாதம் அந்த படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.