தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவரை திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் லேடி சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது பல்வேறு இயக்குனர்களும் நயன்தாராவை வைத்து ஒரு திரைப்படம் ஆவது இயக்க மாட்டோமா என ஏங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நயன்தாரா பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இதன் காரணமாக பல நடிகைகள் இருந்தும் இயக்குனர்கள் நயன்தாராவின் வீட்டு வாசலில் தான் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் மன்னன் என்ற திரைப்படத்தில் கூட நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறாராம் இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு மிகப்பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாக செய்திகள் அரசல் புரசலாக வெளியாகியுள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை திரைப் படத்தில் பிஸியாக இருப்பது மட்டுமல்லாமல் தனது ஆசைக் காதலன் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் இவ்வாறு இவர்கள் நேரத்தை செலவிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது இணையதளத்தில் விடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் நமது நடிகை அதிக அளவு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது தன்னுடைய நண்பர்களுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.