மீண்டும் மீண்டும் சிம்பு வழியில் கிராஸ் ஆகும் நடிகை நயன்தாரா..! வளரவே விடமாட்டாங்க போல..!

nayanthara-01
nayanthara-01

ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் நடிகர் சிம்பு இவர் மிகவும் குண்டாக இருந்ததன் காரணமாக சமீபகாலமாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார் ஆனால் தற்சமயம் தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு திரைப்படத்தில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வரவேற்ப்பை தொடர்ந்து சிம்புவை வைத்து பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திரைப்படம் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது கைவசம் கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல, மற்றும் கோகுல் இயக்கும் கொரோனா குமார்  ஆகிய திரைப்படங்கள் உள்ளது.  மேலும் ஹன்சிகாவுடன் மகா என்ற திரைப்படத்திலும் நடிகர் சிம்பு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உருவாகும் திரைப்படங்களில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படமானது படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது இந்நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக 15 கிலோ உடல் எடையை அவர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இணையத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் செகண்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் ஆனது வருகின்ற வாரம் வெளியிட போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் நயன்தாராவின் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் அப்டேட்டும் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் முன்னாள் காதலர்கள் இருவரும் ஒன்றாக போட்டி போட்டு நடிப்பதை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கத்தில் கோக்கு மாக்கான வார்த்தைகளையும் விட்டு வருகிறார்கள்.