actress nayanthara interview video viral: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பார். மேலும் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து ஒரு காலத்தில் நயன்தாராவை பற்றிய சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் இருந்தது. அந்த பேச்சுக்கள் என்னவென்றால் இவரது காதல் முறிவு தான்.
அதாவது இவரும் நடிகர் பிரபு தேவாவும் காதலித்தது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் எங்கே போனாலும் ஜோடியாகத்தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தார்கள்.
காதல் தோல்வியிலிருந்த நயன்தாரா அப்போது படங்களில் நடிப்பதை சுத்தமாகத் தவிர்த்து இருந்தார்.
இதனையடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அவ்வாறு நடித்த படங்களில் ஒன்றுதான் ஸ்ரீ ராம ராஜ்யம். இந்த படத்தை குறித்து அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா காதல் முறிவுக்கு பின் அளித்த முதல் பேட்டி ஆகும்.
இதோ அந்த வீடியோ.