ஐயோ சாமி ஆள விடுங்க.. விஜய் பட்டதே போதும்.! தயவு செஞ்சு என்ன அப்படி கூப்பிடாதீங்க

actress nayanthara
actress nayanthara

Actress Nayanthara: நயன்தாரா சமீபத்தில் கொடுத்தா பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை நயன்தாரா தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி வருகிறார்.

நயன்தாரா தொடர்ந்து இரண்டு காதல் தோல்வியினால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார் ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். திருமணம் செய்து கொண்டு சில மாதங்களிலேயே வடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

சிங்கம் காட்டுல இல்லாதப்ப யாரு வேணாலும் ராஜா தான்.. இயக்குனர் கே எஸ் ரவிகுமாரை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சினிமா ஒருபுறம் இருந்தாலும் அதே போல் தொழிலதிபராகவும் கலக்கி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.

இந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது எனவே இதன் காரணமாக தொடர்ந்து ஹிந்தி பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மறுபுறம் இறைவன் படத்தின் தோல்விக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி படம் வெளியானது. கலவை விமர்சனங்களை பெற்றாலும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால் படம் பார்க்க கூட்டம் வரவில்லை. எனவே வசூல் ரீதியாகவும் அடிவாங்கியுள்ளது.

இளையராஜா தயாரித்த படத்தில் ரஜினி.. வான்டடாக வந்து மாட்டிய இயக்குனர்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா.?

இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த நயன்தாரா நான் சம்பாதிக்கும் பணம், புகழ் அனைத்துமே ரசிகர்கள் கொடுத்தது தான். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் தயவுசெய்து என்னை யாரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள் எல்லோரும் திட்டுவார்கள் என்றார்.

இவ்வாறு சமீபத்தில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதாக பலரும் கூறி வந்தனர். இதனால் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் விஜய்க்கு எதிராக பல கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் சிலர் விஜய் திட்டுவதையும் பார்த்தோம் எனவே இதனால் தான் நயன்தாராவும் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம் என கூறுவதாக கூறப்படுகிறது.