தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன்முதலாக தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே எளிதில் ரசிகர்களை கவர்ந்ததன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் முதல் சூப்பர் ஸ்டார் வரை உள்ள அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்து விட்டார்.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மிக மோசமாக கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் தல அஜித்துடன் கூட பில்லா திரைப்படத்தில் இவருடைய கவர்ச்சி பெயர் போனது.
ஆனால் தற்போது பிரபலமான நடிகையாக மாறியதன் பிறகு கவர்ச்சிக்கு டாட்டா காட்டிவிட்டு சோலோ ஹீரோயினாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். என்னதான் முழுசாக நனைந்தும் பின் முக்காடு போட்டலும் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கிக் கொண்டு தான் வருகிறார்.
இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் உடல்நிலை குறைவின் காரணமாக நயன்தாராவிற்கு சீக்கிரமாக திருமணம் முடித்து விட வேண்டும் என உறவினர்கள் முன் வந்தார்கள் ஆனால் படப்பிடிப்பு இருப்பதன் காரணமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது. தற்போது ஒரு திரைப்படத்தில் ஷாருக்கானுடன் ஜோடியாக நடிப்பதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் இவர்களுடைய திருமணம் தள்ளி போய்விட்டன.
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் என்ன என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா இரவு டின்னர் முடிந்ததன் பிறகாக அனைத்து பாத்திரங்களையும் அவரேதான் சுத்தம் செய்து வைப்பார் என கூறியுள்ளார் இதைக் கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.