18 வயசுலயே முத்துன கத்திரிக்கா போல் இருக்கும் நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்

nayanthara-latest
nayanthara-latest

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தனது கேரியரை தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக தான் ஆரம்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பிறகு தமிழில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போதைய முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களோ அதே அளவிற்கு நயன்தாராவும் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது உள்ள நடிகைகளுக்கு ரோல்மாடலாக திகழ்கிறார். இந்நிலையில் இவரை பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருக்கும் பொழுது மனசினக்கரேஎன்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜெயராம் படப்பிடிப்பின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார் அந்த ஒரு புகைப்படம் நயன்தாராவின் வாழ்க்கையையே மாற்றியது என்று கூறலாம்.

அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஐயா. இத்திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களை யாருடா இந்த பொண்ணு என்று சொல்லுமளவிற்கு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இவருக்கு எப்படி ஐயா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அந்தவகையில் ஹரி ஜெயா  தன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தாராம்.

பிறகு தன் நண்பனான பிஆர்ஓ ஜாக்சனிடம் ஏதாவது குடும்பப்பாங்கான நடிகை இருந்தால் கூறுங்கள் என்று தெரிவித்து இருந்தாராம். ஜான்சன் தனது நெருங்கிய நண்பரான கேரள பத்திரிக்கையில் பணியாற்றி வரும் அஜயிடம் இதைப்பற்றிய கூறிஉள்ளார்.

அந்தவகையில் அஜய் நயன்தாராவுடன் பேட்டி ஒன்றில் எடுத்த புகைப்படத்தை ஹரிக்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு தான் ஐயா படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகை நயன்தாரா ஐயா திரைப்படத்திற்கு பிறகு அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து தற்பொழுது திரை உலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.

nayanthara
nayanthara