தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நயன்தாரா தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார் மேலும் நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் தான் இயக்கியிருந்தார் மேலும் சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட சில பிரபலங்களும் நடித்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் O2. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாரா கனெக்ட், ஜவான், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், காட்பாதர், திரில்லர் போன்ற ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்த பிஸியாக வரும் இந்த நேரத்தில் தான் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம்த்திற்கு பிறகு பல சர்ச்சைகளில் சிக்கி கொண்ட இவர் தற்பொழுது அதிலிருந்து வெளியாகி உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் நடித்து பிரபலமடைந்த பிறகு நடிகை என்ற ஒரு அங்கீகாரத்துடன் தனது பள்ளிக்கு சென்று அங்கு தனது தலைமை ஆசிரியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர்.
அங்கு இருக்கும் O.E.M என்ற பப்ளிக் பள்ளியில் தான் படித்துள்ளார். நடிகையான பிறகு தனது பள்ளிக்குச் சென்ற நயன்தாரா தனக்கு பிடித்த ஆசிரியருடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமீபத்தில் வைரலாகி வருகின்றது.