தன் கணவரை அவமானப்படுத்திய இடத்திற்கு என்னால் வர முடியாது என மறுத்த நயன்தாரா..

nayanthara-1
nayanthara-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. பொதுவாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி தற்பொழுது அடுத்தடுத்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

பல அவமானத்திற்கு பிறகு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகை என்ற புகழ் அவருக்கு இருந்து வருகிறது. மேலும் பலரும் லேடி சூப்பர் ஸ்டாரை தன்னுடைய ரோல் மாடலாக வைத்து வருகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனை மட்டும் வேண்டாம் என கூறிவிட்டு என்னை மட்டும் எதற்கு நடிக்க கூப்பிடுறீங்க என் கணவர் வராத இடத்திற்கு நானும் வரமாட்டேன் என கரார் காட்டி வருகிறாராம் நயன்தாரா.

அதாவது தற்பொழுது நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இவருடைய அடுத்த படத்தின் அப்டேட் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா கடந்த ஏழு வருடங்களாக காதலித்து இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திடீரென வாடகத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த தகவலையும் அறிவித்தனர். இந்நிலையில் தற்பொழுது நடிகை நயன்தாரா பெரும்பாலும் தன்னுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் அவர்கள் நடிகர் அஜித்தின் 62ஆவது படத்தினை லைக்கா நிறுவனத்திடம் பேசி வாங்கிக் கொண்டார்.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து விக்னேஷ் சிவன் லைக்கா மற்றும் அஜித்திடம் கதையை கூறினார். ஆனால் அந்த கதை பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை எனவே அஜித் விக்னேஷ் சிவனை தன்னுடைய 62வது படத்திலிருந்து தூக்கினார். 8 மாதங்களாக விக்னேஷ் இந்த கதையை தயார் செய்து இருந்த நிலையில் திடீரென இவர்கள் வேண்டாம் எனக் கூறியதால் நயன்தாராவே லைக்கா மற்றும் அஜித்திடம் பேசி உள்ளார்.

ஆனால் அஜித் திடீரென மகிழ் திருமேனியிடம் தன்னுடைய 62வது திரைப்படத்தினை கொடுத்துள்ளார் இதனால் நயன்தாரா உச்சகட்ட கோபத்தில் இருந்து வரும் நிலையில் தன்னையும் தன் கணவரையும் அவமானப்படுத்தி விட்டதாகவும் இதற்கு மேல் அஜித் படத்தில் நடிக்கப் போவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளாராம். இதற்கு முன்பு அஜித் மற்றும் நயன்தாரா கூட்டணியில் பில்லா, ஆரம்பம், ஏகன், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்த மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.