தனது சொந்த குடும்பத்தை பார்ப்பதற்காக கொச்சி சென்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவனின் அழகிய புகைப்படங்கள்.!

nayanthara-viknesh-shivan-1
nayanthara-viknesh-shivan-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்கிய விக்னேஷ் சிவனை படப்பிடிப்பில் சந்தித்து பேசும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது கிட்டதட்ட ஏழு வருடங்களாக காதலித்து சமீபத்தில் ஜூன் 9 ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.  இவர்களின் திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள்,  நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு இவர்களை ஆசீர்வாதம் செய்தனர்.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு நயன்தாரா காலணி அணிந்து சென்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.  இதன் காரணமாக விக்னேஷ் சிவன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

அதன்பிறகு பிரபல ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இதுவரையும் எங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி இதற்கு மேலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்து பத்திரிக்கையாளர்களுக்கு விருந்தளித்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது புதுமண தம்பதிகள் நயன்தாராவின் பெற்றோரை சந்திக்க கொச்சிக்கு சென்றுள்ளனர்.  கேரளாவில் உள்ள கொச்சின் விமான நிலையத்தில் இவர்கள் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  நயன்தாரா ஆரஞ்சு நிற சுடிதாரிலும், விக்னேஷ் சிவன் பிளாக் கலர் டீசர்டிலும்  இருக்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது சில நாட்கள் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த வீட்டில் இருவரும் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

viknash nayanthara
viknash nayanthara