தனி விமானத்தில் கேரளா சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ்.? இதுதான் காரணமா.?

nayanthara amd viknesh shivan
nayanthara amd viknesh shivan

பொதுவாக நடிகைகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தால் அவர்கள் மற்ற பாலிவுட், டோலிவுட் போன்றவற்றிலும் நடிப்பது வழக்கமாக இருக்கிறது. அதிலும் பல நடிகைகள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஆனால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் பாலிவுட் போன்றவற்றில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

இதற்குக் காரணம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கொடி கட்டி வந்த பலர் பாலிவுட் போன்றவற்றில் படிப்பதற்கு ஆர்வம் காட்டி மொத்த சினிமாவையும் கெரியரையும் வினாக்கி கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள் எனவே நயன்தாரா இருக்கும் இடத்தில் ராஜாவாக இருக்கலாம் என்று தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவரின் அழகினாலும்,சிறந்த நடிப்புத் திறமையினால்  ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் நடிப்பில் கடைசியாக ஓடிடி வழியாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதுவரையிலும் இல்லாத அளவிற்கு புதிதாக அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தனது காதலரான விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தான் பிரபல காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு இவர்கள் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகுவது வழக்கமாக இருந்து வருகிறது.

nayanthara viknesh shivan 1
nayanthara viknesh shivan 1

அந்த வகையில் இவர்கள் தனி விமானத்தில் இன்று கேரளா கொச்சிக்கு வந்து இறங்கி உள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எதற்காக இவர்கள் கேரளா சென்றுள்ளார்கள் என்று சரியாக தெரியவில்லை.

nayanthara viknesh shivan
nayanthara viknesh shivan