செய்தியாளர்களிடம் சென்டிமென்டான பல தகவல்களை பகிர்ந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.!

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணம் ஜூன் 9ஆம் தேதி மிகவும் கோலாகலமாக மகாபலிபுரம் ஹோட்டலில் நடைபெற்று முடிந்தது.

இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் அரசியலை சேர்ந்தவர்கள் என பலரும் இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு இவர்களை ஆசீர்வாதம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு நேற்று திருப்பதி சென்றிருந்தார்கள்.

மேலும் இன்று விக்னேஷ் சிவன் முன்பு சொன்னது போலவே இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.  மேலும் அனைத்து செய்தியாளர்களும் புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  மேலும் முதலில் பேச ஆரம்பித்த நயன்தாரா இதுவரையும் எங்களை சப்போர்ட்டு பண்ணியதுக்கு மிக்க நன்றி இன்னும் நீங்கள் எல்லோரும் இனிமேலும் எங்களுக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் இவர்கள் திருப்பதியில் தான் முதலில் திருமணம் செய்வதற்காக முடிவெடுத்துள்ளார் பிறகு அவ்வளவு தூரம் யாரையும் வரச்சொல்லி துன்புறுத்த வேண்டாம் என்பதற்காக தான் மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்ட ஹோட்டலில் விக்னேஷ் சிவன் திருமணத்தை வைத்ததாக கூறியுள்ளார்.

இது இவர்களுக்கு சென்டிமென்டான ஹோட்டல் என்றுதான் கூறவேண்டும் ஏனென்றால் முதல் முதலில் நயன்தாராவிற்கு நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையை சொல்ல இந்த ஹோட்டலில் தான் சந்தித்தோம். எனவே முதல் சந்திப்பு நடந்த இடத்திலேயே தனது திருமணமும் நடக்க வேண்டுமென விக்னேஷ் சிவன் விரும்பியுள்ளார்.

மேலும் நயன்தாராவிற்கு சென்டிமென்டாக இருக்க வேண்டும் என்பதற்காக 9ஆம் திருமண தேதியாக தேர்ந்தெடுக்கலாம்.  இவ்வாறு இதன் காரணமாகவே ஜூன் 9ம் தேதி மகாபலிபுரம் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.