திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாராவை பற்றி வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த தற்போது திருமணம் முடிந்துள்ளது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் நேற்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களின் திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவர் மத்தியிலும் நடைபெற்று முடிந்த நிலையில் பலரும் இவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.
மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் அதிகமாக வெளியாகவில்லை என்றாலும் ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. மேலும் இவர்களின் திருமண வீடியோ படமாக்கப்பட்ட நெட்ப்ளிக்ஸ் சரியாக வெளியாக இருக்கிறது.
திருமணம் முடிந்த கையோடு இவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். இப்பொழுது நயன்தாரா காலில் காலணி அணிந்து இருந்ததாலும், பிறகு போட்டோ ஷூட் நடத்தியதாலும் பெரும் சர்ச்சையை வைத்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம் எழுதி திருப்பதி கோவில் அதிகாரியிடம் கொடுத்துள்ளாராம். இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது நடிகை நயன்தாராவிற்கு ரூபாய் 3 கோடி மதிப்புள்ள தங்க நகையும், ரூபாய் 5 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக அளித்ததுள்ளார்.பிறகு நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு ரூபாய் 20 கோடி மதிப்புள்ள பங்களாவை பரிசளித்து உள்ளதாக கூறப்படுகிறது.