நயன்தாராவின் ப்ளஸ மைனஸ் ஆக்கிட்ட அப்பறம் எனக்கு அடிமை தான்.! மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்

nayanthara 2
nayanthara 2

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மற்ற மொழித் திரைப்படங்களில் நடிக்காமல் தமிழ் சினிமாவில் தனது கொடியை நிலைநாட்டி மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஏராளமான நடிகைகள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஓரளவிற்கு பிரபலமடைந்து மாற்றி மாற்றி நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நயன்தாரா மட்டும் இருக்கும் இடத்திலே ராஜாவாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.இவ்வாறு லேடி சூப்பர் ஸ்டார் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு இவர்களின் நிச்சயதார்த்தத்தை யாரிடமும் சொல்லாமல் இவர்ளே மோதிரத்தை மாற்றிக்கொண்டார்கள். இதன் காரணமாக இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பலமுறை எப்பொழுது திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டு வருவதாகவும் ஆனால் தற்பொழுது நயன்தாராவிற்கு நல்ல மார்கெட் இருப்பதால் இப்பொழுதே சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நயன்தாரா முனைப்பில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு திருமண தேதி தள்ளிக்கொண்டே போய்க் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற ஆப்ஷன் கம்பெனி நடத்தி வருகிறார்கள். அதில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம்  வெளியாகியுள்ளது இத்திரைப்படத்தில் நயன்தாரா குடும்ப பெண்ணாகவும், சமந்தா கிளாமருக்கு முக்கியத்துவம் தந்தும் நடித்துள்ளார்கள்.

இந்த படம் மிகவும் காமெடியாக குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்கும் திரைப்படமாக இருந்தாலும் சமந்தாவுக்கு எப்படி கிளம்பர் வேடம் கொடுத்தது நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது இருந்தாலும் நயன்தாராவை விடவும் சமந்தா தான் நன்றாக நடித்துள்ளார் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

பிறகு ரசிகர்கள் நயன்தாராவின் கேரியரை இந்த திரைப்படத்தில் வீணாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விக்னேஷ் சிவன் இப்படி ஒரு மொக்கையான படத்தை எடுத்து நயன்தாராவின் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளார் என நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.