பொதுவாக சினிமாவில் ஒரு நடிகை முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வந்தால் அவரின் மீது பல சர்ச்சைகள் எழும்புவது ஒரு சாதாரண விஷயம் அந்த வகையில் தற்போது சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.
இவர் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், விடா முயற்சியினாலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார். இவர் தற்பொழுது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த ஐந்து வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அந்த வகையில் இவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில திரைப்பிரபலங்கள் இவர்கள் இன்னும் ஒரு வருடங்களில் கண்டிப்பாக பிரிந்து விடுவார்கள் என்று கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாராவின் மீது பல காதல் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது எடுக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்தவகையில் விக்னேஷ் சிவன் எங்கு சென்றாலும் நயன்தாராவும் அவருடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இருவரும் யானை மேல் சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவர்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் ரசிகர்கள் கடுப்பில் இருந்த வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.