விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் கண்மணி மனோகரன் நடித்து வந்தார். பிறகு இந்த சீரியலில் இருந்து விலகி உள்ள நிலையில் அதற்கான காரணத்தை சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அது குறித்த தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் டிஆர்பி-யிலும் முன்னணி வகித்து வரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பார்த்தி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் நடித்து வருகிறார்.மேலும் கண்ணமாவாக ரோஷினி ஹரி பிரியன் நடித்து வந்த நிலையில் அவர் விலகியதால் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் இவர்களை தொடர்ந்து அஞ்சலி இந்த சீரியலில் அஞ்சலி விலகினார் இதனை தொடர்ந்து பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர்களும் விலகினார்கள் இவ்வாறு தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனைவரும் இந்த சீரியலில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இவ்வாறு இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி விலகியது அனைவருக்கும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தற்பொழுது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கண்மணி அஞ்சலி கதாபாத்திரத்திற்காக நான் நிறைய வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன்.
அஞ்சலியாக மூன்று வருடங்கள் கடந்த உடன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்தேன், நான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகியது அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் நடிப்பதற்காகத்தான் ஏனென்றால் இந்த சீரியலில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.