திருமணமான மறுநாளே அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்.! அதற்கான காரணம் இதுதான்..

nayanthara-viknesh-shivan-7
nayanthara-viknesh-shivan-7

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்கள் அந்த புகைப்படம் இணையதளத்தில் மிகவும் பரவலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து அதிகாலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர் அந்தப் புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாராவின் திருமணத்தை எதிர்ப்பார்த்த ரசிகர்கள் ஒருவழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது.

இந்நிலையில் ஏழுமலையானை தரிசித்த பிறகு கோவிலுக்கு வெளியே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து போட்டோ ஷுட் எடுத்து வந்தார்கள் .அப்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காலணி அணிந்து கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் நயன்தாராவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காலணி அணிந்து கொண்டு போவதை தடை செய்த பிறகும் இவர்கள் காலணி அணிந்தால் இதைக் குறித்து விசாரணை செய்வதாக தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் தேவஸ்தான அதிகாரிகளிடம் செய்த தவறை கடிதத்தின் மூலம் கடிதத்தின் மூலம் மன்னிப்பு கேட்டு வருகிறார்.

nayanthara-viknesh-shivan-8
nayanthara-viknesh-shivan-8

அதன்பிறகு விக்னேஷ் சிவன் கடிதத்தில் திருமணமான பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி ஏழுமலையானை தரிசித்த வந்ததாகவும் அப்போது திருமணம் நடந்த சந்தோஷத்தின் போட்டோ சூட் எடுக்கும் அவசரத்தில் காலணியை உணரவில்லை என்று கூறுகிறார். இதுதான் நடந்தது என்று எல்லா உண்மையையும் கூறி விக்னேஷ் சிவன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வருகிறார். திருமணம் நடந்தது இல் ஆரம்பித்து கோவிலுக்குச்சென்ற வரையும் அனைத்து புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்கள்.

nayanthara-viknesh-shivan-9
nayanthara-viknesh-shivan-9

எனவே விக்னேஷ் சிவன் கடவுளை அவமரியாதை செய்யும் படியாக எதையும் செய்யவில்லை இதனால் பக்தர்கள் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதை தொடர்ந்து திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்தி வந்தார்கள் இவர்கள் இரண்டு பேரும் நல்ல ஜோடி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்வதோடு மட்டுமல்லாமல் இவர்களை நல்லவிதமாக வாழ்த்தியும் வருகிறார்கள்