நயன்தாரா காதலி என்பதால் அவருக்கு ஒரு நியாயம் சமந்தாவிற்கு ஒரு நியமா.! விக்னேஷ் சிவனை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்.

kaathu vaakula 2 kaathal
kaathu vaakula 2 kaathal

பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகை நடித்தாலே அந்த திரைப்படத்தினை பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்து வருவது வழக்கம் இப்படி திடீரென்று இரண்டு முன்னணி நடிகைகளை வைத்து எடுத்தால் என்னாவது, தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் வைத்து மிகப்பெரிய ஹீரோவான விஜய் சேதுபதியையும் வைத்து உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இத்திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார் இவ்வாறு மிகப்பெரிய பட்டாளங்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் ரீலிஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்து வருகிறார்கள். நயன்தாரா மற்றும் சமந்தா இருவருமே சினிமாவில் முன்னணி நடிகைகள் என்பதால் போட்டி போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள் ஆனால் இப்போது எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.

தோடு மட்டுமல்லாமல் இவர்கள் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இவர்களின் நட்பினை பார்த்து ரசிகர்கள் புல்லரிப்பதாக கூறுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் பாடலில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியை பார்த்து சில ரசிகர்கள் இயக்குனருக்கு எதிராக சில கேள்வியை எழுப்பி உள்ளார்கள். அதாவது அந்த பாடல் காட்சியை நயன்தாரா மிகவும் அடக்கமாக புடவையிலும், சமந்தா ஓவர் கிளாமராக மிகக்குறைவான உடையிலும் டான்ஸ் ஆடுகிறார்.

எனவே இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  எனவே ஒரு சில ரசிகர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டதால் தான் கிளாமராக காட்டாமல் ஹோம்லியான லுக்கில் காட்டியுள்ளார். சமந்தாவை மட்டும் க்ளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்தப் பாடலின் மட்டுமல்லாமல் முழுக்க முழுக்க இந்த திரைப்படத்தில் சமந்தா கொஞ்சம் கிளாமராக தான் காட்டியிருக்கிறாராம்.

எனவே ரசிகர்கள் நீ கட்டிக்க போற பொண்ணு நான் ஒரு நியாயம் சமந்தாவுக்கு ஒரு நியாயமா என்று இயக்குனரை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.  மேலும் சமந்தா வேறு ஒருவரின் மனைவி தானே விவாகரத்தும் ஆகிவிட்டது இனிமேல் அவங்க எப்படி இருந்தால் என்ன என்று நினைத்து இருக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு படத்தில் நயன்தாரா சீதையாக நடித்து இருந்தார் தற்போது சீதைக்கேற்ற ராமனோ விக்னேஷ் சிவன் மாறி வருகிறார் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள் மறுபக்கம் பார்க்கும்போது ஆத்துல போற தண்ணிய குடிச்சா என்ன என்ற நிலைமைதான்  என்றும் கூறி வருகிறார்கள்.