நயன்தாரா மற்றும் டிடி-யின் நெருக்கமான உறவு.! மெஹந்தி முதல் திருமணம் வரை..

dd-nayanthara
dd-nayanthara

தொகுப்பாளினி டிடி மற்றும் நயன்தாராவின் உறவைப் பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சின்னத்திரையின் ஒரு அங்கமான அவர் என்கிறு திவ்யதர்ஷினி சொல்லலாம். இவர் விஜய் டிவியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருவதால் இவரை விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அனைவரும் அழைத்து வருகின்றனர்.

இவ்வாறு சின்னத்திரையில் பிரபலமடைந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் சில சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தார் பிறகு தான் இவரின் பேச்சுத் திறமையினால் தொகுப்பாளினியாக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது இவ்வாறு இவரின் விடா முயற்சியினால் சினிமாவில் பிரபலமடைந்தார்.

மேலும் தொகுப்பாளினியாக பணியாற்றும் பொழுது ஏராளமான முன்னணி திரைப்படங்களை நேரில் சந்தித்து நேர்காணல் நடத்தினார்.  இதன் மூலம் இவருக்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் இவர்களின் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்தவகையில் பவர்பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட இன்னும் சில திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் “ஜோஷ்வா இமைப்போல் காக்க” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் சுந்தர்சி இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் கோலாகலமாக ரஜினிகாந்த், ஷாருக்கான், சூரியா, விஜய் சேதுபதி என ஏராளமான முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில் தொகுப்பாளினி டிடியும் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

டிடி திருமணத்தின் மட்டுமல்லாமல் மெஹந்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.  இதன் மூலம் டிடியும் நயன்தாராவும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரிய வருகிறது.