நான் நயன்தாராவை பின்பற்றுகிறேனா அதற்கான அவசியம் எனக்கு கிடையாது என கூறிய பிரபல நடிகை.!

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நடித்து வரும் இவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக பணம் வந்து கொண்டிருக்கும் இவருடைய இடத்தினை பிடிப்பதற்கு பல நடிகைகள் முயற்சி செய்து வருகிறார்கள். மேலும் இவரின் மீது பல நடிகைகளுக்கும் பொறாமை இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை ஒருவர் நயன்தாராவின் இடத்தை பிடிப்பதற்கு மிகவும் ஆசைப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் நான் அப்படி நினைக்கவில்லை என அந்த நடிகை சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது குறித்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதாவது தற்பொழுது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் எனவே இவருக்கு நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாராவும் சமீப காலங்களாக சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார் அப்படி வெளியாகும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இதன் காரணமாக வளர்ந்து வரும் நடிகைகள் அனைவரும் இதனை பின்பற்றி வருகிறார்கள்.

எனவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நயன்தாராவை ஓவர் டெக் செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்று தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகையை ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் விழாவின்பொழுது மேடையில் பேசிய இவர் டிரைவர் ஜமுனா திரைப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

மேலும் என்னுடைய பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது ஆனால் இந்த திரைப்படம் வெற்றினை பெறும் என நம்புகிறேன் இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் இந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். மேலும் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டும் என்றும் நான் நயன்தாரா பாணியில் நடிக்கிறேன் என பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் எனக்கென தனி ஸ்டைல் இருக்கிறது மேலும் அதற்கான அவசியம் எனக்கு கிடையாது எனவும் கூறியிருக்கிறார்.