நயன்தாரா அஜித்தை மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளரை வாங்க வாங்கனு வாங்கிய பயில்வான் ரங்கநாதன்.!

ajith nayanthara
ajith nayanthara

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகராக நடித்து பிரபலமடைந்து பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பல நடிகர், நடிகைகளை பற்றிய ஏராளமான விஷயங்களை மிகவும் தைரியமாக பத்திரிக்கைகள், சோசியல் மீடியாக்கள் மற்றும் வீடியோக்கள் என எடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர்தான் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.

இவர் பேசிய பல விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கக் கூடியதாக இருந்தாலும் சில விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளை பற்றி அவர் கூறி வருவதால் பல சினிமா நட்சத்திரங்கள் மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்கள் எனவே இவரின் பேச்சுத் திறமையினால் இவருக்கென்று சில ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் ராஜனை பற்றி சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே தயாரித்துள்ள ராஜன் தற்பொழுதெல்லாம் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்றவர்களை பற்றிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மேலும் அவர்கள் சம்பளம் குறித்தும் அவதூறான  கருத்துகளை பேசி வருகிறார்.

இவர் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட பொழுது அந்த திரைப்படத்தினைப் பற்றி அல்லது இசையை பற்றி பேசாமல் ஏதாவது ஒரு நடிகரோ, நடிகையோ பற்றி கூறி வம்புக்கிழுத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனைப்பற்றி தற்போது பயில்வான் ரங்கநாதன் கருத்தினை கூறி உள்ளார்.

அதில் ஒரு நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்கினாள் உங்களுக்கு என்ன மேலும் தங்களுடைய படம் மிகப்பெரிய நஷ்டம் என்று எந்த ஒரு தயாரிப்பாளரும் கூறவில்லை நீங்கள் ஏன் அஜித், விஜய் போன்றவர்கள் திரைப்படங்களை இவ்வளவு கோடி நஷ்டம் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்,உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் என்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தமா போனோமானு இருக்கணும் என்று கூறினார்.

பிறகு தங்கள் சொந்த பட விளம்பரத்திற்கு வரும் நயன்தாராவை என மற்ற தயாரிப்பாளர் படத்திற்கு வருவதில்லை என்ற கேள்வியை மேடை வைத்தாராம். பொதுவாக இதுபோன்ற விளம்பரத்திற்கு அஜித் மற்றும் நயன்தாரா வரமாட்டோம் என்று கூறியிருப்பது கோலிவுட் வட்டாரங்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் இதை ஏன் விமர்சனம் செய்து வருகிறார் என்று தெரியவில்லை.

பிறகு இவர் படம் தயாரிக்கும் பொழுது அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் அந்த பொறாமையினால் தான் இப்படி அவதூறாக பேசுகிறார் என்றும் அவர் பேசுவது அனைத்தும் பொய் ரசிகர்கள் யாரும் அவர் கூறுவதை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.பிறகு பயில்வான் ரங்கநாதன் நானும் நிறைய திரைப்பிரபலங்களைப் பற்றிக் கூறி உள்ளேன் ஆனால் இவரை போன்று பொய் பேசியது கிடையாது எனக் கூறியுள்ளார்.