90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர்தான் நடிகை நதியா. இவர் பிரபு, ரஜினி, மோகன், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
நடிகை நதியா முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அந்தவகையில் 1980ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் அதன்பிறகு தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் 1988ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இறுதியாக 1994 ஆம் ஆண்டு பிரபுவின் நூறாவது படமான ரகுராம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனதால் தொடர்ந்து திரைப் படங்களில் நடிக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்பொழுது இவர் தெலுங்கு மலையாளம் தமிழ் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் சில காலங்களாக 54 வயதானாலும் கூட எப்படி உங்கள் அழகும் இளமையும் குறையவே இல்லை என கேட்டு வந்தார்கள் அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்பொழுது தொடர்ந்து உடற்பயிற்சி யோகா மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவற்றை தான் தனது அழகிற்கு காரணம் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ