33 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் நடித்த பழைய புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை நதியா.! வைரலாகும் புகைப்படம்..

nathiya
nathiya

1980-90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை நதியா. இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் தமிழில் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.திருமணத்திற்கு பிறகு இவர் பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து  நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன் மூலம் தற்பொழுது உள்ள இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார். தமிழ் ரசிகர்களுக்கு அம்மா என்றாலே பிடிக்கும் எனவே இவர் மிகவும் நல்ல அம்மாவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்தார்.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நதியா. ரஜினிகாந்துடன் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படம் ரிலீசாகி நேற்றுடன் 32 வருடங்கள் முடிந்துள்ளது.

எனவே நதியா இந்த படத்தின் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 32 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் என்னால் நம்பமுடியவில்லை நேரம் பறந்து போகிறது ஆனால் நினைவுகள் எப்போதும் இருக்கும் என்னுடைய லக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் என பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.இவரை தொடர்ந்து நதியா, ராதா ஆகியோர்களும் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.