கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்துகொண்டிருப்பது சன் டிவி. சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இவ்வாறு வெற்றிகரமான பல சீரியல்களை ஒளிபரப்பாகி வந்த சன்டிவி திடீரென்று இடையியல் டிஆர்பி-யில் பெரிதும் அடி வாங்கியது இதற்கு முக்கிய காரணம் சினிமாவில் இருந்து தனது வயது முதிர்ச்சியின் காரணத்தினால் சின்னத்திரையில் நடிக்க வந்த நடிகர், நடிகைகளை வைத்தும், வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் வருபவர்களை வைத்தும் சீரியல்களை ஒளிபரப்பி வந்ததால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பார்ப்பதை மக்கள் அனைவரும் தவிர்த்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் மற்ற அனைத்து தொலைக்காட்சிகளும் இதனை பயன்படுத்திக் கொண்டு இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவது, சீரியல்களில் அதிகப்படியான காதல் காட்சிகள் இடம்பெறுவது போன்றவற்றை செய்து தங்களது டிஆர்பியை உயர்த்தினார்கள்.
எனவே இதன் காரணமாக பெரிதும் டிஆர்பி-யில் அடி வாங்கிய சன் டிவி சமீப காலங்களாக அதிகபடியான ரசனை நிறைந்த சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு முன்னணி நடிகைகளாக நடித்து வரும் பல நடிகைகளை சிறப்பு தோற்றம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அபியும் நானும் சீரியலில் நடிகை நந்திதா சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாக உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஆவார்.