Actress Nandita swetha new look photos: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா. இவர் தமிழில் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் பூர்ணிமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது. அதனால் இவருக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகிய எதிர்நீச்சல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
எதிர்நீச்சல் படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனால் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டரஸ் என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார், இதனைத் தொடர்ந்து இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இடம் பொருள் ஏவல், முண்டாசுபட்டி, கலகலப்பு-2, காத்திருப்போர் பட்டியல் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் பிரபுதேவாவுடன் இணைந்து தேவி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 7, அதன் பிறகு அவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை, எப்பொழுதும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா ஸ்வேதாவிற்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் தெலுங்கு திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டி நடிக்க இருக்கிறார், நந்திதா ஸ்வேதா இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் இனி கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடத்துள்ளார். அதனால் ரசிகர்களுக்கு இனி விருந்துதான்.
லாக் டவுனில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் பிரபலங்கள் தங்களின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் நந்திதா ஸ்வேதா ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிடுவாங்க போல என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.