சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவை அவமானப்படுத்திய நடிகை நமீதா – பேசுவதை நிறுத்திய லேடி சூப்பர் ஸ்டார்.! வெளியே வந்த வீடியோ.

nayanthara
nayanthara

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு நம்பர் ஒன் நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியா குரியன். ஆனால் ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என தான் கூப்பிட்டு வருகின்றனர்.

இவர் நடிப்பில் கடைசியாக கூட வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பராக ஓடியது அதனைத் தொடர்ந்து படங்களில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது ஆறு வருட காதலர் விக்னேஷ் சிவனை ஒரு வழியாக ஜூலை 9-ஆம் தேதி நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி மிக சைலண்டாக இருந்து கொண்டு தனது வேலையை பார்த்து வருகிறார் இதனால் அனைவருக்கும் பிடித்த நடிகையாக நயன்தாரா இருக்கிறார் ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் நயன்தாராவை பிடிக்கவில்லை அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.

அஜித் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பில்லா. இந்த படத்தில் நயன்தாரா, நமீதா, ரகுமான், சந்தானம், ஆதித்யா, பிரபு, பிரேம்ஜி, ஜான் விஜய் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்தது படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தான். நயன்தாராவுக்கு நமீதாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்து பின் பேசாமல் போய் உள்ளனர். இது பற்றி பேட்டி ஒன்றில் நயன்தாரா கூறியது.

பில்லா படத்தில் நடித்தபோது ஆரம்பத்தில் நானும், நமிதாவும் நன்றாகத் தான் இருந்தோம் முதலில் நான் தான் போய் அவரிடம் பேசினேன் எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் திடீரென்று அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இருக்கும்போது அவங்க வருவாங்க எல்லோரிடமும் ஹாய் சொல்வாங்க என்னை மட்டும் விட்டுவிடுவார்கள் எனக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை.

எங்கள் இருவருக்கும் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லை எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எனக்கு தோன்றியது. ஆனால் திடீரென்று அப்படி ஆகிவிட்டது நானும் அப்படியே விட்டு விட்டேன் எனக் கூறினார்.