நடிகை நமிதா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட நமிதா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் தன்னுடைய சமூகவலைதளத்தில், உன்னுடைய ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது இவர் மிகவும் மறைவான மனநிலை கொண்டவர். இவர் இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட முறையில் என்னுடைய பெயரை அழைத்து எனக்கு மெசேஜ் செய்துள்ளார்.
அவரின் பெயரை அவர் இன்ஸ்டாகிராம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அவர் என்ன அழைக்கும்போது ஹாய்.. ஐட்டம்… என அழைத்தார். இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறினார். மேலும் இதுபற்றி நான் தொடர்ந்து கேட்ட பொழுது என்னுடைய ஆபாச படங்களை பார்த்துள்ளதாக கூறினார், அது மட்டுமில்லாமல் அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் போவதாக கூறினார், உடனே நானும் அதை நீ செய் என்று கூறினேன். இதுதான் மலிவான எண்ணம் கொண்ட கோழையின் முகம்.
இவனுக்கு பெண்களை ஆபாசமாக அழைக்கும் உரிமை இருக்கிறது என நினைக்கும் கேவலமான மனிதன், எதற்காக நான் இதைக் கேட்க வேண்டும் என்றால் நான் ஊடகத் துறையில் இருக்கிறேன், கவர்ச்சி திரையில் இருக்கிறேன், நான் ஒரு மனிதராக எப்படி உனக்கு தெரிய வேண்டும் என்று நினைக்கிறாய்,நான் அமைதியாக இருக்கிறேன் என்று தவறாக எடை போட வேண்டாம்.
ஒரு பெண் எந்த பாதையில் இருந்து வந்தாலும்,அந்த பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்று உண்மையான ஆணுக்கு தெரியும், தன்னுடைய அம்மாவை எப்படி மானபங்க படுத்தினால் ஒருவனுக்கு உணர்வு இருக்கும் என்று நல்ல ஆண்மகனுக்கு தெரியும், பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கு பதிலாக துர்கா கடவுளை வணங்குவதற்கு பதிலாக, நவராத்திரியை கொண்டாடுவதற்குப் பதிலாக, பொது வாழ்க்கையில் ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள் என தனது பதிவில் நமீதா கூறியுள்ளார்.