பொதுவாக ஏராளமான நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக நினைக்காமல் தனது திருமண வாழ்க்கையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கிய வந்த நடிகை நமீதா தனது திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகை நமீதா ஒரு திருடி என பிரபல ஹீரோ ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளார். தமிழ் சினிமாவில் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில்தான் நமிதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்த விழாவில் ஏராளமான முன்னணி நடிகர்,நடிகைகள் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு நமிதாவை ஆசீர்வாதம் செய்தார். இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த் நமிதாவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும் என்றும் நானும் அவரும் நிறைய படங்களில் பணியாற்றி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நமிதா ஒரு குழந்தை மாதிரி என்றும் ஆனால் அவருக்கே இன்று குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறியவர் நமிதா பலமுறை சாக்லேட் திருடி நான் பார்த்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்த ஒருமுறை ஒரு கிலோ சாக்லேட் வாங்கிய பொழுது ஏன் இவ்வளவு சாக்லேட் என்று கேட்டதற்கு சாப்பிடத்தான் என்று கூறினாராம்.மேலும் நடிகை நமிதா சாக்லேட் திருடி அடிக்கடி நான் பார்த்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.