இறுக்கி கட்டிப்பிடிங்க.. விஜயகாந்தை பார்த்து சொன்ன நடிகை நளினி.! உடனே கேப்டன் என்ன செய்தார் தெரியுமா.? வெளிவரும் சுவாரஸ்ய தகவல்.

vijayakanth
vijayakanth

கேப்டன் விஜயகாந்த் 80 காலகட்டங்களில் நடிக்க தொடங்கினார். முதலில் இவர் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறியது அதனால் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கு நிகராக விஜயகாந்த் பெயர் பேசப்பட்டது ஒரு கட்டத்தில் அவர்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு முன்னேறினார் விஜயகாந்த்.

இப்படி சினிமாவில் வெற்றியை கண்ட இவர் ஒரு கட்டத்தில் அரசியல் களத்தில் இறங்கி அதிலேயும் வெற்றிக் கனியை பரித்தார் ஆனால் தற்பொழுது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜயகாந்த் குறித்து நடிகை நளினி பேசி உள்ளார். நளினியும் விஜயகாந்த்தும் இதுவரை பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

நளினி விஜயகாந்தை அண்ணா என கூப்பிடுவது வழக்கம் படங்களில் நடிக்கும் போது நளினி ரொம்ப சுட்டித்தனமாக விளையாண்டு கொண்டு தான் இருப்பாராம். நளினி தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருந்ததால் அவரது அம்மா நளினி குண்டாக கூடாது என்பதற்காக டயட்டில் இருப்பதற்காக சில காய்கறிகள் அடங்கிய உணவைத்தான் சாப்பிட சொல்லுவாராம்.

ஆனால் நளினி அப்படி கிடையாதாம் எந்த சாப்பாடாக இருந்தாலும் ஒரு வெட்டு வெட்டுவாராம். அப்படி விஜயகாந்துக்கு வரும் வகை வகையான சாப்பாடுகளை நளினி அப்பொழுது பிடுங்கி சாப்பிடுவது பழக்கம் விஜயகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாப்பாட்டை கொடுத்து அழகு பார்ப்பாராம்.

நளினியும் விஜயகாந்த் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நளினி விஜயகாந்தை அண்ணா என கூப்பிடுவது வழக்கம் அப்படி ஒரு தடவை படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்த் நளினியும் இறுக்கி கட்டி பிடிக்கும் சீன் வந்துள்ளது அப்பொழுது நளினி அண்ணா இருக்கி கட்டிப்பிடியுங்கள் என கூறியுள்ளார் அதற்கு விஜயகாந்த் கட்டிபிடிக்கும் பொழுது அண்ணா என சொன்னால் எப்படி கட்டிப்பிடிப்பது என கூறியுள்ளார் உடனே விஜயகாந்த் விளையாட்டு தனமாக தள்ளிவிட்டு ஓடினாராம் இதனை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.