நானும் இந்த ஆட்டத்தில் இருக்கேன்.! தகதகன்னு இருந்த நக்மா வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம்.!

nagma-tamil360newz
nagma-tamil360newz

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா, இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர்தான் சூர்யாவின் மனைவி ஜோதிகா, நக்மா 90களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் அதேபோல் ஜோதிகாவும் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான்.

நடிகை நக்மா மற்றும் அவரது தங்கை ஜோதிகா தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சினிமா துறையை விட்டு விலகி அவரவர் தங்களுடைய பணியில் மிகவும் பிசியாக வலம் வருகிறார்கள், ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்றி கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக அவர் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம்தான், அதனால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார், ஜோதிகாவின் அக்கா நக்மா இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தான் வாழ்ந்துவருகிறார், நக்மா பிரபல அரசியல் கட்சி ஒன்றில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அரசியல் குறித்து பல அதிரடி கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் இந்தியாவில் 144 தடை விதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் கடைபிடித்து வருகிறார்கள் அதனால் மக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள், பிரபலங்கள் பலரும் வீட்டில் இருக்கும் பொழுது போரடிக்காமல் இருக்க புகைப்படம் மற்றும் விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள் அதேபோல் நடிகை நக்மாவும் தன்னுடைய பழைய புகைப்படமான 25 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.