தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் அவர்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை படிப்படியாக இழந்து விடுகிறார்கள் அதன் பிறகு சினிமாவை விட்டு வெளியேறும் வாய்ப்பு வந்துவிடுகிறது.
அந்த வகையில் என்னதான் வயது முடிந்தாலும் சரி இன்று வரை சினிமாவில் நீடித்து நடித்து வரும் ஒரு நடிகைதான் நதியா இவர் தற்போது வரை குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இவருடைய பெயர் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாக வழிவகுத்தது.
அந்த வகையில் இவர் நடித்த காலகட்டத்தில் அதிக அளவு பிரபல நடிகர் சுரேஷ் அவர்களுடன் ஜோடி போட்டு நதியா பல திரைப் படங்களில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இவர்கள் தொடர்ந்து திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் பொழுது இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பின்னர் அது காதலாக மாறி திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால் இதுகுறித்து நடிகர் சுரேஷ் அவர்கள் நானும் நதியாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே எங்கள் மனதில் வேறு எதுவும் கிடையாது அப்படி நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் காரணம் கிடையாது என தெளிவாக பேசியிருந்தார்.