Actress nadhiya: கமலின் விக்ரம் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மறந்து விட்டதாக முதன் மறையாக நடிகை நதியா கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நதியா கடந்த 2004ஆம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். வயதானாலும் தற்பொழுது வரையிலும் மிகவும் அழகாக இருந்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
நடிகை நதியா 1984ஆம் ஆண்டு வெளியான நோக்காத தூரத்து கண்ணும் நட்பு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு என இவருடைய ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது.
இவ்வாறு இவர் முன்னணி நடிகையாக இருந்து வந்த காலகட்டத்தில் கமலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது. அதுவும் முக்கியமாக கமல் நடிப்பில் வெளியாகும் பாடல்களும், நெருக்கமான காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பேமசாக இருந்து வந்த நிலையில் ஏராளமான நடிகைகள் கமலுடன் நடிக்க ஆசைப்பட்டனர்.
ஆனால் நடிகை நதியா கமல் படம் என்றாலே முத்தக் காட்சி இருக்கும் என பயந்து நடிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் நதியா கமல் படத்தில் ஏன் இதுவரையிலும் நடிக்கவில்லை என்று கேள்வி கேட்க அதற்கு சமீபத்தில் பதில் அளித்துள்ளார். கமலஹாசன் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்காதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கமலுடன் நடிக்க முடியாமல் போனதற்கு ஒரே காரணம் கால்ஷீட் பிரச்சினைதான் அவர் படத்தில் நடிக்க என்னை அணுகும் பொழுதெல்லாம் நான் வேறொரு படத்தில் கமிட்டாகி இருப்பேன். விக்ரம் படத்தில் முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது நான் தான் ஆனால் அந்த சமயத்தில் நான் நிறைய படங்களில் கமிட்டாகி இருந்ததால் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது.
கமல் சார் இன்னமும் நடிக்கிறார் நானும் இன்னமும் நடிக்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கமல் நடிப்பில் 1986ஆம் ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.