Actress Nadhiya daughters photo: நதியா தமிழ் திரைப்பட உலகில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். மேலும் இவர் மலையாளம்,தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, மங்கை ஒரு கங்கை, தாமிரபரணி, சண்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
இவர் நடித்த காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் இவரின் பேர் சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா கொலுசு என பிரபலமாக விளங்கினார். இன்றும் அவர் அழகு கொஞ்சம் கூட மாறவில்லை.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் நதியா போர் அடிக்காமல் இருப்பதற்காக ட்விட்டரில் அதிக நேரம் பொழுதை செலுத்தி வருகிறார். இவர் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.