1985 ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பூவே பூச்சூடவா இந்த திரைப்படத்தில் பத்மினி எஸ் வி சேகர் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நதியா.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மந்திரப் புன்னகை, உயிரே உனக்காக, நிலவே மலரே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். தான் நடிக்கும் காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நதியா 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தற்போது சனம் மற்றும் ஜனா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தை பிறந்த பிறகு சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதன்பிறகு தாமிரபரணி ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தற்பொழுது த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இவர் இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப் படத்தில் நடிப்பதற்காக மேக்கப் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவை பார்த்த இளம் நடிகைகள் கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள். ஏனென்றால் நதியா வயதானாலும் இன்னும் இளமையான தோற்றத்துடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்