Monal : சிம்ரனின் தங்கை தமிழ் சினிமா நடிகையுமான மோனல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே மாடலிங் செய்ய ஆரம்பித்தார் அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. சினிமா வாய்ப்பு கதவை தட்டியதால் அதனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார். விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் மோனால் அறிமுகமானார்.
அதன் பிறகு நடிகர் குணால் அவர்களுடன் ஜோடி சேர்ந்து பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. மேலும் மோனல் லவ்லி, சமுத்திரம், சார்லி சாப்ளின் என வரிசையாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
இரண்டாயிரத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் 2002 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா சுஜித்தான் காரணம் என சிம்ரன் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் சிம்ரனின் குற்றச்சாட்டு ஆதாரம் அற்றது என வழக்கை நிராகரித்தார்கள்.
மோனல் தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் என் வாழ்க்கையில் உண்மையான ஆம்பளையை நான் சந்திக்கவே இல்லை என அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். அந்த சமயத்தில் பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடித்த குணால் அவர்களை காதலித்ததாகவும் அவர் ஏற்றுக்கொள்ளாததால் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் தன்னுடைய அக்கா சிம்ரன் வாழ்க்கை போல் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என அதீத ஆசையில் இருந்தார் மோனல் அவரின் வாழ்க்கை இப்படி காற்றோடு காற்றாய் கரைந்து போனது தங்கையின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சிம்ரன் ஒரு காலகட்டத்தில் சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்து மன உளைச்சலுக்கு ஆளானார்.
மோனல் இறந்து 21 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தன்னுடைய தங்கையை நினைத்து மீல முடியாத துயரத்தில் இருக்கிறார் சிம்ரன்.